சுடச்சுட

    

    தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி

    By ஜயங்கொண்டம்,  |   Published on : 06th November 2014 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

    பயிற்சிக்கு உடையார்பாளையம் மாவட்ட கல்வி அலுவலர் ந. கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் பயிற்சியை தொடக்கிவைத்தார்.

    பயிற்சியில், ஆண்டிமடம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன், ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் ராஜப்ரியன் ஆகியோர், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வளாகங்களிலும் மரக்கன்றுகள் நடுவது, பிளாஸ்டிக் பொருட்களை முழுவதுமாக தவிர்க்க நடவடிக்கை எடுப்பது, சுற்றுச்சூழல் குறித்த கல்விச் சுற்றுலாவில் அதிக மாணவர்களை பங்கேற்கச் செய்வது, சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுப்பது குறித்து பேசினர். முன்னதாக உடற்கல்வி ஆசிரியர் கண்ணதாசன் வரவேற்றார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சந்தானகிருஷ்ணன் நன்றி

    கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai