சுடச்சுட

  

  அரசன்சேரி ஏரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

  By அரியலூர்,  |   Published on : 07th November 2014 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருமானூர் பகுதியில் உள்ள அரசன்சேரி ஏரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக அம்பேத்கர் விவசாய இயக்க மாநிலத் தலைவர் அம்பேத்கர் வழியன் அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:

  அரியலூர் மாவட்டத்தில் புள்ளம்பாடி பாசன வாய்க்காலில் சுமார் 45 பாசன ஏரிகள் உள்ளன. இந்த பாசன ஏரிகளுக்கு புள்ளம்பாடி வாய்க்காலின் மூலம்தான் தண்ணீர் பெறப்படுகிறது.

  அரியலூர் மாவட்ட டெல்டா பகுதியான திருமானூர் பகுதியில் சம்பா நெல் சாகுபடி தொடங்கியுள்ள தருணத்தில் வாய்க்காலில் தண்ணீர் நிரம்பியுள்ளது. ஆனால் சுமார் 340 ஏக்கர் பாசனபரப்பை கொண்ட அரசன்சேரி ஏரிக்கு தண்ணீர் வரவில்லை.

  இதனால் இந்த ஏரி பாசனத்தை நம்பியுள்ள வாண்டராயன்கட்டளை, செங்கராயன்கட்டளை, கீழவரப்பன்குறிச்சி, மேலவரப்பன்குறிச்சி, அழகியமணவாளம், காமரசவல்லி, மாத்தூர், தேளூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி அரசன்சேரி ஏரியில் புள்ளம்பாடி வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai