சுடச்சுட

  

  அரியலூரில் தோட்டக்கலைத் துறை திட்டங்கள் ஆய்வு

  By அரியலூர்  |   Published on : 07th November 2014 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பயனாளிகளை நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

  தேசிய தோட்டக்கலை இயக்கம் 2013-14-ம் ஆண்டில் அரியலூர் மாவட்டம், மேலக்கருப்பூர் கிராமத்தில் அய்யனார் என்பவரது வயலில் நடவு செய்யப்பட்டிருந்த எலுமிச்சை வயலை ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது அரசின் திட்டங்கள் அதிக மக்களுக்கு பயன் கிடைக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் மேலக்கருப்பூரில் செல்வம் என்பவரது வயலில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளதையும், பெரியநாகலூர் விஸ்வநாதன் துவரை பயிரிட்டுள்ளதையும், அஸ்தினாபுரம் விவசாயி சுரேஷ் 1 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளதையும், கருணாமூர்த்தி என்ற விவசாயி அனுசரணை ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதையும் ஆட்சியர் பார்வையிட்டார்.

  மேலும் தேசிய நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் அருங்கால் கிராமத்தில் முருகேசன் என்பவரது வயலில் சொட்டுநீர்ப் பாசனத்தில் மிளகாய் மற்றும் வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளதையும், பார்வையிட்டார். சொட்டுநீர்ப் பாசனத்தில் நிரந்தரப் பயிரான

  மா பயிரிட்டு அதற்கு ஊடுபயிராக பருத்தி பயிர் செய்துள்ள விவசாயி சாமிநாதன் வயலை பார்வையிட்ட ஆட்சியர் அதில் கிடைக்கும் மகசூல் மற்றும் லாபம் குறித்து கேட்டறிந்தார்.

  சொட்டுநீர்ப் பாசனத்தால் நீர் சேமிக்கப்படுவதோடு களைகள் கட்டுப்படுத்தப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

  ஆய்வின்போது வேளாண் இணை இயக்குநர் குணசேகரன், தோட்டக்கலை துணை இயக்குநர் சுப்பையா, தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் சரண்யா, மோகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai