சுடச்சுட

  

  கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்

  By ஜயங்கொண்டம்,  |   Published on : 07th November 2014 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

  அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரத்தில் 11-ம் நூற்றாண்டில் முதலாம் ராஜேந்திர சோழ மன்னரால் பிரகதீஸ்வரர் கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனோஸ்கோவால் உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இங்கு 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமுள்ள பிரகதீஸ்வரருக்கு ஆண்டுதோறும் ஐப்பசி பெüர்ணமியன்று காஞ்சி சங்கரமடம் சார்பில் அன்னாபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

  இந்த அபிஷேகத்தின்போது 100 மூட்டை அரிசி கொண்டு சாதம் சமைத்து லிங்கத்தின் மீது சாத்தப்படும். அவ்வாறு சாத்தப்படும் சாதம் ஒவ்வொன்றும் லிங்கத்தின் தன்மையை பெறுவதாக நம்பப்படுகிறது. இதனால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான லிங்கத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

  இந்த விழாவையொட்டி செவ்வாய்கிழமை கணக்க விநாயகருக்கும், புதன்கிழமை காலையில் பிரகதீஸ்வரருக்கும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வியாழக்கிழமை காலையில் கோயில் வளாகத்தில் சாதம் சமைத்து பிரகதீஸ்வரருக்கு சாத்தப்பட்டு மலர்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றால் அலங்கரிக்கப்பட்டு மாலையில் தீபாராதனை நடைபெற்றது.

  இதன்பின்னர் சுவாமிக்கு சாத்தப்பட்ட சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள சாதம் அருகிலுள்ள ஏரி குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்பட்டது.

  விழாவில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ், அரசு செயலர் கண்ணன், இந்து சமய அறநிலையத் துறை, இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் கோதண்டராமன், செயல் அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai