சுடச்சுட

  

  சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

  By அரியலூர்,  |   Published on : 07th November 2014 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  அரியலூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி முனைப்புடன் நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 11 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி நிறைவு பெற்றுள்ளது.

  இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிருக்கு ஏற்படும் மகசூல் இழப்புகளிலிருந்து ஈடு செய்துகொள்ள தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் அனைவரும் பிரிமீயம் தொகையினை செலுத்தி பங்கு பெற வேண்டும். தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர்க்கடன் பெறும் விவசாயிகளும், பயிர்க்கடன் பெறாத விவசாயிகளும் காப்பீடு செய்துகொள்ள தகுதியானவர்கள்.

  ஒரு ஏக்கருக்கு காப்பீடு செய்யப்படும் தொகை ரூ. 12,800 ஆகும். இந்தக் காப்பீட்டுத் தொகைக்கு நெற்பயிருக்கு ஏக்கருக்கு, சிறு மற்றும் குறு விவசாயிகள் பிரிமியத் தொகையாக ரூ. 115-ம், இதர விவசாயிகள் ரூ. 128-ம் செலுத்த வேண்டும்.

  இத்திட்டத்தில் பங்கு பெற கடன் பெறாத விவசாயிகள் அதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளிலோ, அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ நவ. 15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

  பயிர்க்கடன் பெறும் விவசாயிகளிடம் பிரிமியத் தொகை கடன் பெறும்போதே பிடித்தம் செய்யப்படும். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பிரிமியத்தொகை வரும் 30-ம் தேதிக்குள் பயிர்க்காப்பீட்டுக்காக செலுத்தப்படும்.

  சம்பா நெற்பயிருக்கு காப்பீடு பெற விரும்பும் கடன் பெறாத விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை அலுவலகம் அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளைத் தொடர்பு கொள்ளலாம்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai