சுடச்சுட

    

    செந்துறையிலிருந்து பெண்ணாடத்துக்கு பேருந்து இயக்க வலியுறுத்தல்

    By அரியலூர்,  |   Published on : 07th November 2014 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செந்துறையிலிருந்து பெண்ணாடத்துக்கு பேருந்து இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் சோழன்குடிக்காடு எஸ்.எஸ். கணேசன் அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:

    அரியலூர் மாவட்டம், செந்துறையிலிருந்து இலைக்கடம்பூர், மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, ஆர்.எஸ். மாத்தூர் வழியாக கடலூர் மாவட்டம், பெண்ணாடத்துக்கு ஒரு தனியார் பேருந்து இயக்கப்பட்டு வந்தது.

    அந்தப் பேருந்து கடந்த 8 மாதங்களாக இயக்கப்படவில்லை.

    இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே மீண்டும் அப்பேருந்தை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள

    வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai