சுடச்சுட

    

    திருமானூர் பகுதியில் சாலைகளை சீரமைக்க கோரிக்கை

    By அரியலூர்,  |   Published on : 07th November 2014 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கிளைச் செயலர் ஜீவா தலைமை வகித்தார்.

    இதில் திருமானூர் காந்திநகரில் உள்ள பால்குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும், காந்திநகரில் மிகவும் மோசமான நிலையில் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் தேங்கி நோய்களை பரப்பும் வகையில் உள்ள சிமென்ட் சாலைகளை சீரமைக்க வேண்டும். காந்திநகர் சமுதாயக்கூடத்தின் அருகில் சிமென்ட் சாலையில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலர்கள் புனிதன், துரைசாமி, விவசாய சங்கப் பொருளாளர் ஆரோக்கியநாதன், ஒன்றியச் செயலர் சவுரிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai