சுடச்சுட

    

    அரியலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, மடிக்கணினி திருட்டு

    By அரியலூர்  |   Published on : 08th November 2014 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் - செந்துறை சாலையில் உள்ள புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் இளவழகன். இவரது மனைவி ஜெயந்தி. இவர்கள் இருவரும் உடற்கல்வி ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இளவழகனும், ஜெயந்தியும் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பணிக்குச் சென்றனர்.

    இளவழகனின் குழந்தைகளை, ஜெயந்தியின் தந்தையான சந்தானம் பள்ளியிலிருந்து அழைத்துக்கொண்டு மாலையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதுகுறித்து இளவழகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து பார்த்தபோது, பீரோவிலிருந்த 5 பவுன் நகைகள், வெள்ளிக் கொலுசு, மற்றும் பாத்திரங்கள், மடிக்கணினி ஆகியவை திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.

    அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரபாகரன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார். மேலும், திருட்டு நடைபெற்ற வீட்டுக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai