சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் இன்று பொது விநியோகத் திட்ட குறைகேட்புக் கூட்டம்

    By அரியலூர்  |   Published on : 08th November 2014 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை (நவ. 8) 3 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது.

    மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்பந்தமான குறைகேட்புக் கூட்டம், அரியலூர் வட்டத்துக்கு வாலாஜாநகரத்திலும், செந்துறை வட்டத்துக்கு பொன்பரப்பியிலும், உடையார்பாளையம் வட்டத்துக்கு தத்தனூர் கிழக்கிலும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

    இதில் அரியலூர் வட்டத்துக்கு அரியலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும், செந்துறை வட்டத்துக்கு தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிபக் கழக அரியலூர் மண்டல மேலாளரும், உடையார்பாளையம் வட்டத்துக்கு அரியலூர் பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளரும் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இக்கூட்டத்தை வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவர். இதில் கூட்டுறவுத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், நுகர்வோர் பாதுகாப்புக் குழுக்களின் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பொது விநியோகம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai