சுடச்சுட

  

  உடையார்பாளையம் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

  By ஜயங்கொண்டம்  |   Published on : 08th November 2014 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உடையார்பாளையம் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, ஜயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

  கண்காட்சியில் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்திலிருந்து 104 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. இதில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பிரிவில் பாத்திமா மெட்ரிக் பள்ளி முதலிடத்தையும், வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 2-ம் இடத்தையும், ஆலத்தியூர் வித்யாமந்திர் பள்ளி மாணவர்கள் 3-ம் இடத்தையும் பெற்றனர்.

  9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான பிரிவில் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், கவரபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 2-ம் இடத்தையும், விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 3-ம் இடத்தையும் பெற்றனர்.

  11 மற்றும் 12-ம் வகுப்புகளில் ஆலத்தியூர் வித்யாமந்திர் பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், தத்தனூர் மீனாட்சி ராமசாமி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 2-ம் இடத்தையும், மேலணிகுழி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 3-ம் இடத்தையும் பெற்றனர்.

  தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட கல்வி அலுவலர் ந. கணேசன் தலைமை வகித்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார்.

  விழாவில் தலைமையாசிரியர்கள் தா. பழூர் சுந்தரேசன், சிறுகடம்பூர் பாலசுந்தரம், மீன்சுருட்டி மோகன், பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளி அடைக்கலமேரி, பாத்திமா மெட்ரிக் பள்ளி முதல்வர் உர்சலாசமந்தா, ஆசிரியர்கள் சவுந்திரபாண்டியண், சரவணக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  பெரியார் பள்ளி முதல்வர் ஜான்பிரிட்டோ வரவேற்றார். விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai