சுடச்சுட

  

  செந்துறையில் பள்ளி பேருந்து ஓட்டுநர் கடத்தல்

  By அரியலூர்,  |   Published on : 08th November 2014 03:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம், செந்துறையில் கடன் பிரச்னை தொடர்பாக பள்ளிப் பேருந்து ஓட்டுநர் வியாழக்கிழமை கடத்தப்பட்டார்.

  செந்துறை அருகேயுள்ள சிறுகளத்தூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (35). இவர் செந்துறையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்வதற்கான பேருந்து ஓட்டுநர் மற்றும் உரிமையாளராக உள்ளார்.

  சுப்பிரமணியன், அதே பள்ளியில் ஆசிரயையாக பணியாற்றும் ராஜலட்சுமி என்பவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 5 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம். கொடுத்த கடனை ராஜலட்சுமி பலமுறை திருப்பிக் கேட்டும் அவர் கொடுக்கவில்லையாம்.

  இந்நிலையில், வியாழக்கிழமை ராஜலட்சுமியின் சகோதரர் முருகானந்தம் தனது காரில் உறவினர்கள் தமிழ்வாணன், ராஜா, இளையராஜா ஆகியோருடன் பள்ளிக்கு வந்துள்ளார். பின்னர், பள்ளி முடிந்ததும் ராஜலட்சுமியையும், அவரது 2 குழந்தைகளையும் முருகானந்தம் காரில் ஏற்றிக் கொண்டு ஆர்.எஸ். மாத்தூருக்கு சென்று கொண்டிருந்தார்.

  செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பள்ளிப் பேருந்தின் டயர் பஞ்சரானதால், சாலையோரம் பேருந்தை நிறுத்திவிட்டு சுப்பிரமணியன் கீழே நின்று கொண்டிருந்தாராம். அப்போது, அந்த வழியாக வந்த முருகானந்தம் சுப்பிரமணியனை தனது காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றாராம்.பெரியாக்குறிச்சி அருகே கார் சென்றபோது, சுப்பிரமணியன் செல்போன் மூலம் தனது நண்பர்களிடம் தன்னை கடத்துவதாக தகவல் தெரிவித்துள்ளார்.

  சுப்பிரமணியனின் நண்பர்கள் பெரியாக்குறிச்சியில் காரை நிறுத்தி, காரிலிருந்த அனைவரையும் செந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பள்ளித் தாளாளர் ராஜேந்திரசேகர் அளித்த புகாரின் பேரில், செந்துறை காவல் நிலைய ஆய்வாளர் பாலாஜி விசாரிக்கிறார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai