சுடச்சுட

    

    "மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் கடன் வழங்க முன்வர வேண்டும்'

    By அரியலூர்,  |   Published on : 08th November 2014 03:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகளிர் சுய உதவிக் குழுக்குளுக்கு வங்கிகள் அதிகளவில் கடன் வழங்க முன்வர வேண்டும் என்றார் அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதானக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து வங்கியாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு அவர் மேலும் பேசியது:

    அரியலூர் மாவட்டம் பொருளாதாரத்திலும், கல்வி அறிவிலும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. தமிழக அரசு, பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகவும், கிராமப் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, புதுவாழ்வுத் திட்டம், மகளிர் திட்டம் மூலமாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு, வறுமை நிலையைப் போக்கி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் அமைப்புகளான மகளிர் சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு மற்றும் தொழில் சார்ந்த கூட்டமைப்புகள் செயல்படுகின்றன. 2014-15 -ல் இவ்விரு திட்டங்களுக்கும் ரூ. 43 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வங்கியாளர்கள் மூலம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

    மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்க வங்கியாளர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

    இப்பயிற்சி வகுப்பில் 2011-12 -ல் சிறந்த வங்கியாளர் விருது தேர்வில் திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி முதல் பரிசாக ரூ. 15 ஆயிரமும், அரியலூர் இந்தியன் வங்கி இரண்டாமிடம் பெற்று ரூ.10 ஆயிரமும், அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி மூன்றாமிடம் பெற்று ரூ. 5 ஆயிரத்தையும் பெற்றன.

    மேலும், 2013-14 -ல் அரியலூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் முதலிடத்தையும், அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி இரண்டாமிடத்தையும், இந்தியன் வங்கி மூன்றாமிடத்தையும் பெற்றன. இதற்கான காசோலைகளை ஆட்சியர் அந்தந்த வங்கிகளுக்கு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட அலுவலர் சாமுவேல் இன்பதுரை வரவேற்றார். இந்த பயிற்சி வகுப்பில் புதுவாழ்வுத் திட்ட அலுவலர் சுந்தரேஸ்வரன், முன்னோடி வங்கி மேலாளர் முரளிகிருஷ்ணன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் மிருணாளினி சுதந்திரன் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள், அனைத்து வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai