சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட கணக்கெடுப்புப் பணி அண்மையில் நடைபெற்றது.

  இரும்புலிக்குறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தீவிர பங்கேற்புடன் கூடிய விழிப்புணர்வு கூட்டம், அரியலூர் மாவட்ட ஊராட்சிச் செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.

  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடைபெற்றது. இதில் துணை ஆணையர் அருளப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் உள்ளிட்டோர், பொதுமக்களிடம் கணக்கெடுப்பு விவரங்களை தெரிவித்தனர்.

  வட்டார ஊராட்சி அலுவலர் க. பிரபாகர் வரவேற்றார். ஊராட்சி மன்றத் தலைவர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai