சுடச்சுட

  

  வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி திட்டமிடல் கூட்டம்

  By ஜயங்கொண்டம்  |   Published on : 08th November 2014 03:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் ஒன்றியம், கழுமங்கலம், காட்டகரம் ஆகிய கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தீவிர பங்கேற்புடன் கூடிய பணி திட்டமிடல் கூட்டம் மற்றும் கணக்கெடுத்தல் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

  கழுமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவர் சுகந்தியும், காட்டகரத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவர் அன்பழகனும் தலைமை வகித்தனர்.

  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமொழி, ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் மாவட்ட உதவி திட்ட அலுவலர் மெய்யப்பன், திட்டத்தின் செயலாக்கம் குறித்து பேசினார்.

  தொடர்ந்து அலுவலர்கள் ஊராட்சியில் உள்ள வீடுகள், கழிவறை வசதிகள், கால்நடைகள் மற்றும் அதற்கான இடவசதிகள் குறித்தும் ஆய்வு

  செய்தனர்.

  கழுமங்கலம் ஊராட்சி செயலர் கொளஞ்சிநாதன், பணி மேற்பார்வையாளர்கள் சுசீலா, அந்தோனிசாமி, ஒன்றியப் பொறியாளர் ராஜாசிதம்பரம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai