சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் 1700 பேர் தொழில்சார்ந்த பயிற்சி பெற்றுள்ளனர் என்றார் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சாமுவேல் இன்பதுரை.

  அரியலூர் பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் கணினி டேலி இலவச பயிற்சி 30 நாள்கள் நடைபெற்றது. இப்பயிற்சியில் கலந்துகொண்ட 22 கிராமப்புற இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி அவர் மேலும் பேசியது:

  அரியலூர் மாவட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் 1700 பேர் பல்வேறு பயிற்சிகள் பெற்றுள்ளனர். இதில் 850 பேர் சுயதொழில் தொடங்கி வருமானம் பெற்று வருகின்ற

  னர். எனவே, இப்பயிற்சி நிறுவனத்தை வேலைவாய்ப்பற்ற ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற இளைஞர்கள் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார். இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி. முரளிகிருஷ்ணன், நிறுவனத்தின் பயிற்றுநர் சாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai