சுடச்சுட

  

  திருமானூர் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட சிறப்பு முகாமில் 69 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது.

  அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள கண்டிராதீர்த்தம் ஊராட்சியில் வருவாய்த் துறை சார்பில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரன் தலைமை வகித்தார். துரை. மணிவேல் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.

  இதில் பொதுமக்களிடமிருந்து 121 மனுக்களில் 69 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு உத்தரவுகள் வழங்கப்பட்டன. 52 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஊராட்சித் தலைவர் தில்லைதிருவாசகமணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இந்திராகாந்திமணி, சமூக நலத்துறை வட்டாட்சியர் தாரகேஷ்வரி, வட்ட வழங்கல் அலுவலர் முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  அரியலூர் வட்டாட்சியர் வைத்தியநாதன் வரவேற்றார். கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai