சுடச்சுட

  

  அரியலூரில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 600 பெண்களுக்கு 2400 கிராம் தங்கக் காசுகளையும், ரூ. 2 கோடியே 18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித் தொகை காசோலைகளையும் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் சனிக்கிழமை வழங்கினார்.

  மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தலைமை வகித்தார். சிதம்பரம் மக்களவை உறுப்பினர் சந்திரகாசி,துரை. மணிவேல் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  நிகழ்ச்சியில் 10 ஆம் வகுப்பு படித்த 326 பெண்களுக்கு,பட்டம் பயின்ற 274 பெண்களுக்கு என மொத்தம் 600 பெண்களுக்கும் ரூ.2 கோடியே 18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் காசோலை, மற்றும் 2400 கிராம் தங்க காசுகளை வழங்கி ஆட்சியர் பேசியது:

  சமூக நலத் துறையின் கீழ் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் மற்றும் 5 வகையான திருமண நிதியுதவித் திட்டம் செயல்படுகிறது.

  இதில் 10 ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கும் ரூ. 25 ஆயிரம் காசோலை, 4 கிராம் தங்க காசு வழங்கப்படுகிறது. பட்டம் படித்த பெண்களுக்கும் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை 4 கிராம் தங்க காசு வழங்கப்படுகிறது.

  2011-12-ல் 10 ஆம் வகுப்பு படித்த 1471 பெண்களுக்கும், பட்டம் படித்த 479 பெண்களுக்கும் என மொத்தம் 1950 பேருக்கும், ரூ.6 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் காசோலை, 7800 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது.

  2012-13-ல் 10 ஆம் வகுப்பு படித்த 1782 பெண்களுக்கும்,பட்டம் பயின்ற 688 பெண்களுக்கும் என மொத்தம் 2470 பெண்களுக்கும் ரூ.7 கோடியே 89 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் காசோலையும்,மற்றும் 9880 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

  2013-14-ல் 10 ஆம் வகுப்பு படித்த 1187 பெண்களுக்கும், பட்டப் படித்த 534 பெண்களுக்கும் என மொத்தம் 1721 பெண்களுக்கு ரூ.5 கோடியே 63 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் காசோலையும், மற்றும் 6884 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

  2014-15-ல் 10 ஆம் வகுப்பு படித்த 37 பெண்களுக்கும், பட்டம் பயின்ற 37 பெண்களுக்கும் என மொத்தம் 74 பெண்களுக்கு ரூ. 27 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் காசோலை, 296 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர்.

  நிகழ்ச்சியில் சந்திரகாசி எம்பி பேசும்போது,பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக தமிழக முதல்வரால் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தினால் பெண்கள் கல்வி கற்பது அதிகரித்துள்ளது.

  30 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு நலத் திட்டங்களை 3 ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளார் தமிழக முதல்வர். ஒரு குழந்தை பிறந்தவுடன் மருத்துவமனைக்குச் சென்று அந்தக் குழந்தைக்கு நலத்திட்டம் வழங்கும் அரசு தமிழக அரசுதான். இதுபோன்று திட்டங்களை நிறைவேற்றும் அரசு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை என்றார் அவர்.

  நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சடையப்பவிநாயகமூர்த்தி,அரியலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் தாமரை. ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் தனலெட்சுமி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் செல்வராஜ்(செல்வராஜ்),கண்ணகிகுப்புசாமி (ஜயங்கொண்டம்),சீனிவாசன்(திருமானூர்),சுகுணாதவச்செல்வன் (ஆண்டிமடம்),மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி வரவேற்றார். மாவட்ட பாதுகாப்பு அலுவலர் வேலம்மாள் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai