சுடச்சுட

    

    நகராட்சிப் பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை

    By ஜயங்கொண்டம்  |   Published on : 09th November 2014 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சியில் நகராட்சி பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

    நகராட்சி ஆணையர் வே. நவேந்திரன் தலைமையேற்று தொடக்கி வைத்தார். நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முகாமில் கும்பகோணம் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் ஷர்மிளா, மருத்துவ ஆலோசகர் தாமஸ், முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் இப்ராகிம், பாலாஜி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பங்கேற்று நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 107 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். இவர்களில் 3 பேருக்கு கண்புரை நோய் இருப்பது கண்டறியப்பட்டு அறுவைச் சிகிச்சைக்காகத் தேர்வு செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai