சுடச்சுட

  

  கூத்தூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.11) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

  இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அரியலூர் உதவி செயற்பொறியாளர் க. ராஜமாணிக்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கூத்தூர் துணை மின் நிலையத்தில், மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நவ.11 ஆம் தேதி மேற்கொள்ளப்படுகிறது.

  இதனால் அன்று காலை 9 மணி முதல், மாலை 5.30 மணி வரை கூத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பி.ஆர். நல்லூர், மேலமாத்தூர், அல்லிநகரம்,கூத்தூர், பிலிமிசை, ஜேப்பியார் சிமென்ட் ஆலைப் பகுதி, நொச்சிக்குளம், இசட்.ஆத்தூர், அரியலூர் நகரின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai