சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடியதாக இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை போலீஸார் பிடித்து விசாரித்தபோது அவரிடம் வாகனத்துக்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை, மேலும் அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் அவரை காவல் துறையினர் தீவிர விசாரணை செய்தனர்.

    அவர் அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தை அடுத்த நல்லனம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (33) என்பதும், அரியலூர்,கீழப்பழூவூர், தா.பழூர், மீன்சுருட்டி ஆகிய பகுதிகளில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருடியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவரிடமிருந்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான 3 மொபெட்டுகள் உள்ளிட்ட 4 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai