சுடச்சுட

    

    மீன்சுருட்டி அருகே போலி மது விற்றவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள மேலணிக்குழி கிராமத்தில் போலி மது விற்கப்படுவதாக ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, ஆட்சியர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் மண்டல மேலாளர் சத்தியன், மாவட்ட வருவாய் அலுவலர் ரவீந்திரன், கோட்ட வருவாய் அலுவலர் கருணாகரன், கூடுதல் கலால் கண்காணிப்பாளர் செல்லதுரை,மீன்சுருட்டி காவல் நிலைய ஆய்வாளர் வேலுச்சாமி, உதவி ஆய்வாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் மீன்சுருட்டி பகுதியில் விசாரித்தனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த தவமணி (29) நடத்தி வரும் மளிகைக் கடை, வீட்டைச் சோதனை செய்தபோது வீட்டின் குளியலறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 180 மிலி அளவுள்ள 26 போலி மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    இதைத் தொடர்ந்து தவமணியை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai