சுடச்சுட

  

  ஸ்ரீபுரந்தான் கைலாசநாதர் கோயிலில் இன்று குடமுழுக்கு

  By ஜயங்கொண்டம்  |   Published on : 09th November 2014 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம், தா. பழூர் அருகேயுள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை

  குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

  இக்கோயிலில் இருந்த பஞ்சலோக நடராஜர் சிலை உள்ளிட்ட 8 சிலைகள் திருடப்பட்டு பல்வேறு நாடுகளில் விற்கப்பட்டது.

  அவ்வாறாக இங்கிருந்து திருடப்பட்டு ரூ. 32 கோடிக்கு ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட நடராஜர் சிலை மீட்கப்பட்டு கும்பகோணம் சிலை பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்படுகிறது.

  தற்போது இக்கோயிலில் நடைபெற உள்ள குடமுழுக்கை முன்னிட்டு அந்தச் சிலையை கோயிலுக்கு கொண்டுவர வேண்டும் என கிராம மக்கள் கோரியதையடுத்து ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயசுதா சிவசுப்பிரமணியன், செயல் அலுவலர் மணி, ஊராட்சித் தலைவர் கலாவதி சுப்பிரமணியன், வழக்குரைஞர் அசோகன் உள்ளிட்டோர் நீதிமன்ற உத்தரவு பெற்று நடராஜர் சிலையை கும்பகோணம் சிலை பாதுகாப்பு மையத்தில் இருந்து ஸ்ரீபுரந்தானுக்கு பலத்த பாதுகாப்புடன் வெள்ளிகிழமை கொண்டுவந்தனர்.

  விழா முடிந்ததும் ஞாயிற்றுக்கிழமை மாலையே சிலை குடந்தை பாதுகாப்பு மையத்திற்கு கொண்டுசெல்லப்பட உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai