சுடச்சுட

  

  அரியலூர் மாவட்ட ஏழை முஸ்லிம்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

  அரியலூரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாவட்ட முஸ்லிம் மகளிர் சங்க உறுப்பினர்கள் 5 பேருக்கு தலா ரூ.3,800 வீதம் ரூ.19 ஆயிரத்தில் விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கிய அவர் மேலும் கூறியது:

  தமிழக அரசின் நலத் திட்டங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் செயல்படுத்தப்படுகிறது. அவற்றில் ஒன்றான சிறப்புத் திட்டமே சிறுபான்மையினத்தவர்களில் முஸ்லிம் மகளிர்களுக்கு உதவிடும் வகையில் செயல்படுத்தப்படும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்.

  அரியலூர் மாவட்ட ஏழை முஸ்லிம் மகளிர்கள், குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இதுவரை 2012-13-ல் 44 பேருக்கு ரூ.1,58,400 செலவினத்தில் தையல் இயந்திரம், 2013-14-ல் 94 பேருக்கு ரூ. 3,38,400 மதிப்பில் தையல் இயந்திரம்,ஒருவருக்கு ரூ.10,500 மதிப்பில் எம்பிராய்டிங் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

  கடந்த 18.10.2014-ல் அரியலூர் ஜூம்மா பள்ளிவாசலில் நடைபெற்ற விழாவில் 50 நபர்களுக்கு ரூ. 1,98,000 மதிப்பில் தையல் இயந்திரம்,மதரஸா பள்ளிவாசலில் அரபி பயிலும் 65 முஸ்லிம் குழந்தைகளுக்கு ரூ. 7,150 மதிப்பில் பரிசுப் பொருள், அரியலூர் டவுன் ஜூம்மா பள்ளிவாசலுக்கு ரூ. 72 ஆயிரம் மதிப்பில் ஒரு குளிர்சாதன சவப்பெட்டியும் இச்சங்கத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

  அரியலூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் திரட்டப்படும் நிதிக்கு அரசு இணை மானியம் வழங்கப்படுவதைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் பயன் பெறலாம் என்றார் ஆட்சியர்.

  ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சடையப்பவிநாயகமூர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஸ்தபாகமால்பாட்ஷா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai