சுடச்சுட

    

    செந்துறையில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து தேசிய மாணவர் படை மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

    செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் நடைபெற்ற பேரணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்து தொடக்கி வைத்து மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்து விளக்கினார். பேரணியில் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி நித்திஷ், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்த பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். செந்துறை அண்ணாநகர், நெய்வனம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, பொதுமக்களிடம் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

    இதில் தேசிய பசுமைப்படை அலுவலர் ஆர். சுலைமான், ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர் ரவி செய்தார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai