சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சுருக்கத்திருத்தம் 2015-க்கான விண்ணப்பங்கள் 15.10.2014 முதல் 10.11.2014 வரை அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் உள்ள (பள்ளிகளில்) நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  அதன்படி இதுவரை 2 பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து படிவம் 6-ல், 11,484, படிவம் 7-ல் 105, படிவம் 8-ல் 2,645, படிவம் 8-ஏ-ல் 8 என மொத்தம் 15 ஆயிரத்து 3 மனுக்கள் வரப்பெற்று நடவடிக்கையில் உள்ளன. வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாத நபர்கள் மற்றும் 1.1.1997 க்கு முன்னர் பிறந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் உரிய படிவத்தில் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்ங்ழ்ங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ர்ய் என்ற இணைய முகவரி வாயிலாகவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai