சுடச்சுட

  

  திருச்சியில் நடைபெற உள்ள ஜி.கே. வாசனினி புதிய கட்சி தொடக்க விழாவில் அரியலூர் மாவட்டம் சார்பில் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  அரியலூர்,திருமானூர் வட்டார காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.எம். குமார் தலைமை வகித்தார். வழக்குரைஞர் பழனிச்சாமி வரவேற்றார்.

  கூட்டத்தில், சிதம்பரம் மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுந்தரசோழன், வழக்குரைஞர் கதிரவன், திருமானூர் வட்டார காங்கிரஸ் தலைவர் வீர. ரவி, அரியலூர் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் சுப்பிரமணியன், தொழில் அதிபர் ராமஜெயம், ராமராஜ், ஆண்டிமடம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஜி.கே. வாசனுக்கு ஆதரவு தெரிவித்து அவர் தொடங்க உள்ள கட்சியில் அனைவரும் இணைய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

  கூட்டத்தில் அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர், மாவட்ட, ஒன்றிய, நகர, கிராம நிர்வாகிகள் அனைவரும் கட்சியில் இருந்து விலகுவது, ஜி.கே. வாசன் தொடங்கவுள்ள கட்சியில் இணைவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai