சுடச்சுட

    

    அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி

    By ஜயங்கொண்டம்  |   Published on : 11th November 2014 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் சார்பில் பத்தாம் வகுப்பு பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடைப்பயிற்சி அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) காந்திமதி தலைமை வகித்தார். உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் காந்தி தொடக்கி வைத்தார். பயிற்சியில் கருத்தாளர்கள் அன்பழகன், ராஜதுரை, செல்வகுமார், உத்திராபதி ஆகியோர் பங்கேற்று கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு எளிமையாக கற்பித்தல், வினா வங்கி கட்டமைப்பின் படி பயிற்சியளித்தல் மற்றும் பத்தாம் வகுப்பில் 100 சதம் தேர்ச்சி குறித்து பயிற்சியளித்தனர்.

    இதில் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் சவுந்திரபாண்டியன் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai