Enable Javscript for better performance
சாலை விபத்தில் இளைஞர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டம் அருகே கார் - இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் படுகாயமடைந்தார்.

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (23). இவர் ஞாயிற்றுக்கிழமை ஜயங்கொண்டத்திலிருந்து குறுக்கு ரோட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது சொக்கலிங்கபுரம் கண்ணன் (37) ஓட்டிவந்த கார் கார்த்திகேயன் மீது மோதியது. இதில் பலத்தக் காயமடைந்த அவர் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் ஜயங்கொண்டம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் இளங்கோவன் வழக்குப் பதிந்து கண்ணனை கைது செய்து விசாரிக்கிறார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai