சுடச்சுட

  

  அரியலூரில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 520 மதிப்பிலான சிமென்ட் மூட்டைகளை மோசடி செய்ததாக 2 பேர் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  அரியலூர் மாவட்டம், ஆலத்தியூரைச் சேர்ந்தவர் கார்த்திக்பாண்டியன் (40), தளவாய் பகுதி தனியார் சிமென்ட் ஆலையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு சிமென்ட் அனுப்பும் போக்குவரத்து நிறுவன மேற்பார்வையாளர்.

  இவர் பணிபுரியும் நிறுவனம் மூலம் கடந்த அக். 29-ல் கேரள மாநிலம் கண்ணனூருக்கு ஒரு லாரியில் 21 டன் எடையுள்ள 410 சிமென்ட் மூட்டைகள் அனுப்பப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 520. லாரியை சிவகாசியைச் சேர்ந்த கண்ணன் ஓட்டிச்சென்றார்.

  இந்நிலையில், அந்த சிமென்ட் மூட்டைகள் சம்பந்தப்பட்டவருக்கு செல்லவில்லையாம். இதையடுத்து கார்த்திக்பாண்டியன், ஓட்டுநர் கண்ணனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர், சிமென்ட் மூட்டைகளை லாரி அதிபரான கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பிரேம்ஆனந்த் வேறு ஒருவருக்கு விற்று விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

  இதைத் தொடர்ந்து கார்த்திக்பாண்டியன், தளவாய் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். ஆய்வாளர் (பொ) ஆறுமுகம், உதவி ஆய்வாளர் காமராஜ் ஆகியோர் வழக்குப் பதிந்து, ஓட்டுநர் கண்ணன் மற்றும் லாரி அதிபர் பிரேம்ஆனந்தை தேடி வருகிறார்கள்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai