Enable Javscript for better performance
சிலிண்டர்களை வணிக நோக்கில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சிலிண்டர்களை வணிக நோக்கில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

    By அரியலூர்  |   Published on : 11th November 2014 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை வணிக நோக்கத்துக்காகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    அரியலூர் மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை வணிக நோக்கத்துக்காக, உணவகங்கள், திருமண மண்டபம், தேநீர்கடை, பேக்கரி, மற்றும் வியாபார ஸ்தலங்களில் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம்.

    எனவே மேற்காணும் வியாபார ஸ்தலங்களில் வணிக நோக்கிலான எரிவாயு உருளைகளை மட்டும் பயன்படுத்திட வேண்டும். விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் சிலிண்டரை பறிமுதல் செய்வதுடன் அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை

    தொடரப்படும்.

    விதிமீறுவோர் குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் அரியலூர் 9445796402, வட்ட வழங்கல் அலுவலர், அரியலூர் -- 9445000274, வட்ட வழங்கல் அலுவலர், ஜயங்கொண்டம் --- 9445000275, வட்ட வழங்கல் அலுவலர் செந்துறை --- 9445000276 ஆகியோரிடம் தெரிவிக்கலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai