சுடச்சுட

    

    சுகாதார, குடும்ப நலத் திட்டப் பணி குறித்து ஆய்வு

    By அரியலூர்,  |   Published on : 11th November 2014 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் மற்றும் குடும்ப நலத்திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

    கூட்டத்தில் துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணி, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், குடும்ப நல அறுவைச் சிகிச்சை திட்டம், அதிக பிள்ளைபேறு குறைத்தல் மற்றும் பெண் குழந்தைகள் பிறப்பு சதம் அதிகரித்தல் போன்றவை குறித்து துணை சுகாதாரம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்களுடன் ஆட்சியர் கலந்தாய்வு மேற்கொண்டார்.

    கூட்டத்தில் 117 துணை சுகாதார நிலைய செவிலியர்கள், மற்றும் 38 ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் 6 வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுடன் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு திட்டப்பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.

    சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மோகன், குடும்ப நல இணை இயக்குநர் மற்றும் அலுவலரக்ள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai