சுடச்சுட

  

  அரசுப் பேருந்துகளில் தங்களை ஏற்ற மறுப்பதைக் கண்டித்து அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே பள்ளி மாணவர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள வீரசோழபுரம் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்கோட்டை அரசுப் பள்ளி மற்றும் ஜயங்கொண்டத்தில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர். இவர்களிடம் இலவச பஸ் பாஸ் இருந்தும் வீரசோழபுரத்தில் இருந்து உட்கோட்டை செல்லும், கும்பகோணத்தில் இருந்து ஜயங்கொண்டம் செல்லும் அரசுப் பேருந்துகள் மாணவர்களை ஏற்றுவதில்லையாம். மீறி ஏறுவோர் வழியிலேயே இறக்கி விடப்படுவதாக மாணவர்கள் கூறுகின்றனர். மேலும் உட்கோட்டை வழியாக ஜயங்கொண்டம் செல்லும் பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லையாம்.

  இதைக் கண்டித்து மாணவர்களும் பொதுமக்களும் வீரசோழபுரத்தில் சென்னை கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

  தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸார் மற்றும் ஜயங்கொண்டம் வட்டாட்சியர் முகுந்தன் உள்ளிட்டோர் வந்து அரசுப் பேருந்துகளில் மாணவர்களை ஏற்றிச்செல்ல உத்தரவிடுவதாகவும் உட்கோட்டை வழியாக ஜயங்கொண்டம் செல்லும் பேருந்தை முறையாக இயக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்ததையடுத்து மறியலைக் கைவிட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai