சுடச்சுட

  

  அரியலூரில் முறைகேடுகளில் ஈடுபட்ட 4 கடைகளின் உர விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  அரியலூர் மாவட்டத்தில் நெல் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உரக்கடைகளைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  அரியலூர் மாவட்ட, ஜயங்கொண்டம் வட்டாரத்தில் அரியலூர் மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் க. முரளிதரன் தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

  இதில் விற்பனை விளம்பரப் பலகை பராமரிக்காதது, உர இருப்பு புத்தகத்தில் இருப்புக்கும், உண்மை இருப்புக்கும் வேறுபாடு காணப்பட்டது. டி படிவம் இல்லாமல் விற்றது ஆகிய விதி மீறல்களுக்காக 4 கடைகளில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 39.150 டன் உரங்களுக்கு விற்பனை தடை ஆணை வழங்கப்பட்டது.

  மேலும் விவசாயிகளுக்கு உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்து தரமானதாக வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய உரம் மற்றும் பூச்சி மருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு அரசு தரக்கட்டுப்பாடு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உரக்கடைகளில் மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகப்பட்ச விலைக்கு அதிகமாக உர விற்பனை செய்தால் உரிய நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

  ஆய்வின்போது வேளாண் அலுவலர்கள் ராமலிங்கம் (அரியலூர்),அமுதன்(ஜயங்கொண்டம்) ஆகியோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai