சுடச்சுட

  

  ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு: அரியலூரில் ஊர்வலம், போராட்டம்

  By dn  |   Published on : 12th November 2014 06:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மாலை ஊர்வலமாக சென்றனர். மேலும் பெண்கள் ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.

  அரியலூர் நகரில் குளங்கள், ஏரிகள், குட்டைகள் போன்ற ஆதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினரும், நகராட்சியினரும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி

  அகற்றி வருகின்றனர். அரியலூர் சார் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி மேற்பார்வையில், ஜயங்கொண்டம் சாலையில் நீர் வழி ஆக்கிரமிப்பில் பல ஆண்டுகளாக இருந்த 5

  வீடுகள், அரியலூர் - செந்துறை சாலையில் இருசுக்குட்டையில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த 25 வீடுகள் அகற்றப்பட்டன.

  இந்நிலையில், அரியலூர் மேல்பகுதியில் குறிஞ்சான்குளம் மற்றும், அரசு நிலையிட்டான் ஏரிக் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று செவ்வாய்க்கிழமை

  அறிவிக்கப்பட்டது. மேலும் அங்கு ஆக்கிரமிப்பில் உள்ள 187 வீடுகளுக்கு நோட்டீஸ் மூலம் அறிவிப்பும் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் நகர திமுக

  செயலாளரும், நகராட்சி தலைவருமான முருகேசன், தேமுதிக மாவட்டச் செயலர் இராம.ஜெயவேல், பாமக மாநிலத் துணைச் செயலாளர் பாலு, மதிமுக நகர செயலர்

  வழக்குரைஞர் மனோகரன், பாஜக நகரத் தலைவர் கோகுல், அதிமுக மாவட்ட மாணவர் அணிச் செயலர் ஓ.பி. சங்கர் உள்ளிட்டோரும், மேலத்தெரு பொதுமக்கள், பெண்கள்

  என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை மாலை பேருந்து நிலையம் அண்ணா சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

  ஊர்வலம் சத்திரம் வழியாக தேரடியை அடைந்தது, அங்கு பெண்கள் ஒப்பாரி போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு காவல்துறையினர்

  பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறியதால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டதாக தெரிகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai