சுடச்சுட

  

  உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்து கொள்வது அவசியம்

  By dn  |   Published on : 12th November 2014 06:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு அலுவலர்கள் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம் என்றார் அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

  அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியை செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்து அவர் மேலும் பேசியது:

  அரசு அலுவலர்களுக்கு சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் சார்பில், ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி (நற்ழ்ங்ள்ள் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் அய்க் வர்ஞ்ஹ)

  அலுவலர்களுக்கு அளிக்கப்படவுள்ளது. உடலும், மனமும் ஆரோக்கியமாக இருந்ததால்தான் அலுவலர்கள் அலுவலகப் பணிகளை சிறப்பாக செய்ய முடியும் என்பதற்காக

  இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. குடும்ப சூழ்நிலை மற்றும் ஏனைய காரணங்களால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக அலுவலர்கள் பொதுமக்களிடம் சுணக்கம் காட்டாமல்,

  அவர்களுக்கு புத்துணர்ச்சியுடனும், ஆர்வத்துடனும் சேவை செய்ய இந்தப் பயிற்சி உறுதுணையாக இருக்கும் என்றார் அவர்.

  விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஸ்தபா கமால் பாட்ஷா, அண்ணா மேலாண்மை பயிற்சி நிலைய

  ஒருங்கிணைப்பாளர் ராமராஜ், வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பொதுப்பணித் துறை, மீன்வளத் துறை, கூட்டுறவுத் துறை, வனத் துறை அலுவலர்கள்

  கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai