சுடச்சுட

    

    சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கோரி உண்ணாவிரதம்

    By dn  |   Published on : 12th November 2014 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் அரசு சிமென்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கக் கோரி ஆனந்தவாடி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

    அரியலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு ஆனந்தவாடி ஆர். சிவந்தராஜன் தலைமை வகித்தார். எஸ்.எஸ். சிவசங்கர் எம்.எல்.ஏ.

    உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்து பேசினார். இதில், சிஐடியு தொழிற்சங்கத்தின் மாவட்டத் தலைவரும், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட சிமென்ட் ஆலை மற்றும்

    சுரங்கத் தொழிலாளர் சங்கத்தின் மாநில அமைப்பாளருமான ஆர். சிற்றம்பலம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

    இதில் திமுக செந்துறை ஒன்றியச் செயலர் ஞானமூர்த்தி, சிபிஐ மாவட்டச் செயலர் ஆர். உலகநாதன், தேமுதிக மாவட்டச் செயலர் இராம. ஜெயவேல், திமுக நகரச்

    செயலர் ஆர்.முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதிமுக மாவட்டச் செயலர் கு. சின்னப்பா உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai