சுடச்சுட

  

  தொழிற்சாலைகளால் 10 ஆண்டுகளில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிப்பு

  By dn  |   Published on : 12th November 2014 06:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகளால் கடந்த 10 ஆண்டுகளில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளதாக மாணவிகள் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

  தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு புதுதில்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல் ஆய்வுகள் அறிவியல் துறையால்

  வரவேற்கப்படுகின்றன.

  அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிக் பள்ளி மாணவிகள் கிறிஸ்டில், அபர்ணா, மதுமித்ரா, திஷா, மற்றும் வித்யஸ்ரீ ஆகியோர் இதற்கான ஆய்வில் ஈடுபட்டனர். ஆசிரியை

  அனிட்டா கார்லின் மாணவிகளுக்கு வழிகாட்டியாக செயல்பட்டார்.

  "தட்பவெப்பநிலை மாற்றம்' குறித்து மாணவிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமென்ட் ஆலைகளால் ஆண்டுதோறும் 1 கோடி டன் கார்பன்

  டைஆக்ûஸடு வெளியேற்றப்படுகிறது. கார்பன் டைஆக்ûஸடு புவி வெப்பமயமாதல் தொடர்புடைய வாயு ஆகும்.

  இதனால் கடந்த 30 ஆண்டுகளுக்கான தட்பவெப்ப நிலையில் மாற்றம் இருக்கிறதா என்று மாணவிகள் ஆராய்ந்தனர். இதில் கடந்த 10 ஆண்டுகளில் 4 டிகிரி செல்சியஸ்

  அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளதும், பருவமழை அளவிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதையும் மாணவிகள் கண்டறிந்தனர்.

  அரியலூரை அடுத்த ஓட்டக்கோவில் கிராமத்தில் பொதுமக்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். வாழ்வாதாரம், சுகாதாரம், சுற்றுப்புறம், மேலும் விழிப்புணர்வில்

  பல மாற்றங்கள் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

  மேலும் இதற்காக மரம் வளர்த்தல் மற்றும் மரபு சாரா எரி பொருள்கள் பயன்படுத்துதல் ஆகிய வழிமுறைகளை கடைப்பிடிக்க அரியலூர் சிமென்ட் ஆலைகள் மற்றும்

  பொதுமக்களை மாணவிகள் கேட்டுக்கொண்டனர். இதன் முதல் கட்டமாக ஓட்டக்கோவில் பகுதியில் மாணவிகள் மரம் நட்டு வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை

  ஏற்படுத்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai