சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

  இதுதொடர்பாக அரியலூர் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் துளசி மாதவராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

  அரியலூரில் ஜயங்கொண்டம் சாலையில் இயங்கி வரும், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி மூலம் திறமையான பயிற்சியாளர்களை

  கொண்டு முற்றிலும் இலவசமாக இரு சக்கர வாகனம் பழுது நீக்குதல், எலக்ட்ரீஷியன், பெண்களுக்கான கலைநயமிக்க சணல்பை தயாரிக்கும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு

  பயிற்சிகளை வழங்கி வருகிறது.

  இப் பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் கிடையாது. பயிற்சியின்போது மதிய உணவு, தேநீர், பயிற்சிக்கு வந்து செல்ல பேருந்துக் கட்டணம் வழங்கப்படும். இதற்கான

  நேர்காணல், நவ.11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை அரியலூர் உழவர் சந்தை அருகில் உள்ள ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனத்தில்

  நடைபெறுகிறது.

  பயிற்சியில் சேர விரும்புவோர் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும், 18 வயது முதல், 45 வயது வரை உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

  முதலில் வருபவர்களுக்கு பயிற்சியில் முன்னுரிமை வழங்கப்படும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai