சுடச்சுட

  

  சேமிப்பு கணக்கில் ரூ. 54,200 முறைகேடு:கிராம அஞ்சல் அலுவலர் மீது வழக்கு

  By ஜயங்கொண்டம்  |   Published on : 13th November 2014 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள வானதிரையான்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் மோகன் (27). இவர், கொல்லாபுரம் கிராம கிளை அஞ்சலகத்தில் அஞ்சல் அலுவலராக உள்ளார்.

  கடந்த 4.4.2012 முதல் 16.8.2012 வரை அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கில் பணம் செலுத்திய வாடிக்கையாளர்களின் பணத்தை அவர்களது கணக்குப் புத்தகத்தில் மட்டும் வரவு வைத்துவிட்டு, அதை அஞ்சலகக் கணக்கில் செலுத்தவில்லையாம்.

  மேலும், வாடிக்கையாளர்களின் கையெழுத்தைப் போட்டு அவர்களின் பணத்தை எடுத்து 54,200 ரூபாயை தனது சொந்த தேவைக்காக பயன்படுத்தினாராம். அந்தப் பணத்தை மீண்டும் மார்ச் மாதத்தில் கணக்கு முடிக்கும் போது அலுவலகத்தில் செலுத்தியுள்ளார்.

  ஜயங்கொண்டம் அஞ்சலக ஆய்வாளர் பிரதீப்குமார், மீன்சுருட்டி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின் பேரில், ஆய்வாளர் வேலுசாமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai