சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி டாஸ்மாக் கடையில் ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான மதுபானம் மற்றும் ரொக்கம் செவ்வாய்க்கிழமை இரவு திருட்டுப் போயின.

  மீன்சுருட்டி அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தில் கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்தக் கடையின் மேற்பார்வையாளர் தணிகைவேல், விற்பனையாளர் ராஜேந்திரன் ஆகியோர் புதன்கிழமை காலை கடையை திறந்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருந்ததை பார்த்தனர்.

  மேலும், கடையில் இருந்த ரூ. 2,500 ரொக்கம், ரூ. 1500 மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.

  இதுகுறித்த புகாரின் பேரில், மீன்சுருட்டி காவல் நிலைய ஆய்வாளர் வேலுசாமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai