சுடச்சுட

  

  அபாகஸ் போட்டி: 17 மாணவர்கள் தேசிய அளவில் சாதனை

  By அரியலூர்,  |   Published on : 14th November 2014 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் அரியலூர் மாணவர்கள் சாதனை நிகழ்த்தினர்.

  பள்ளி மாணவர்களின் ஞாபகசக்தி, கணித ஆற்றல், கற்பனைத் திறன் மற்றும் கவனிக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பள்ளிகளில் அபாகஸ் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

  இந்த வகுப்புகளில் பயிலக்கூடிய மாணவர்களின் ஆற்றலை கணிக்கும் வகையில் ஆண்டுதோறும் அபாகஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது.

  நிகழாண்டுக்கான தேசிய அளவிலான பிரைனோபிரைன் அபாகஸ் போட்டிகள் சென்னையில் அண்மையில் நடைபெற்றன. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

  இதில் அரியலூர் சபர்மதி வித்யாலயா பள்ளி சார்பில் கலந்து கொண்ட 90 மாணவ, மாணவிகளில் 17 பேர் தேசிய அளவில் முதலிடத்தை பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர்.

  31 பேர் இரண்டாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், 22 பேர் தேசிய அளவில் 3-ம் இடத்தைப் பெற்று வெள்ளி பதக்கத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை சபர்மதி வித்யாலயா பள்ளியின் தாளாளர், முதல்வர் ஆகியோர் வாழ்த்தினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai