சுடச்சுட

    

    அரியலூர் வரும் இளங்கோவனுக்கு வரவேற்பு அளிக்க முடிவு

    By அரியலூர்  |   Published on : 14th November 2014 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூருக்கு நவ. 24-ம் தேதி வரும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அரியலூர் நகர காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    அரியலூர் நகர காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம், செவ்வாய்க்கிழமை அரியலூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் மாவட்டத் தலைவர் எஸ். பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு மாவட்டத் தலைவர் மா.மு. சிவகுமார் வரவேற்றார்.

    கூட்டத்தில், அரியலூர் நகர காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலேயே பணிபுரிந்து கட்சியை வளர்ப்பது, சோனியாகாந்தி, ராகுல்காந்தி வழிகாட்டுதலின்படி நடந்து கொள்வது, தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராக நியமிக்கப்பட்ட ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு வாழ்த்து தெரிவிப்பது, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சிறப்புக் கூட்டத்துக்கு நவ. 24-ம் தேதி வருகை தரும் மாநிலத் தலைவர் இளங்கோவனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, நேருவின் 125-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலர் எஸ்.எம். சந்திரசேகர், நகர காங்கிரஸ் பொறுப்பாளர் ஏபிஎஸ். பழனிச்சாமி, கே. பிச்சைபிள்ளை, ஆர். பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai