சுடச்சுட

    

    அரியலூர் அருகே உள்ள வாரணவாசி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில் (32). இவர் கீழப்பழூவூரில் உள்ள தனியார் சிமென்ட் ஆலையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், செந்தில் புதன்கிழமை இரவு வேலை முடிந்து அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கல்லங்குறிச்சி ராமச்சந்திரன் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் செந்தில் மீது மோதியது. இதில் செந்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த ராமச்சந்திரன் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கீழப்பழூவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai