சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டக் காவல் துறை சார்பில் பாதுகாப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.

    பயிற்சியை குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் இளங்கோ தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் காவலர்கள், காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் ஆகியோர்களுக்கு பாதுகாப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பாதுகாப்புப் பணியில் எவ்வாறு விழிப்புடன் செயல்படுவது பொதுமக்களிடம் எப்படி நம்பிக்கையை பெறுவது என்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 20 பெண்கள் உள்ளிட்ட 200 பேர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai