சுடச்சுட

    

    பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேர் மீது வழக்குப்பதிவு

    By அரியலூர்  |   Published on : 14th November 2014 03:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 2 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    அரியலூர் மாவட்டம், பழைய அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரபிரசாத் என்பவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பாலியல் உறவு கொண்டாராம். மேலும் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் தந்தை கொளஞ்சி இதுகுறித்து ராஜேந்திரபிரசாத்தின் நண்பரான மணிகண்டனிடம் கேட்டதற்கு அவரும் கொளஞ்சி குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

    இதுகுறித்து கொளஞ்சி அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புதன்கிழமை அளித்தப்புகாரின் பேரில் ஆய்வாளர் ஷர்மிளா வழக்குப் பதிந்து தலைமறைவான ராஜேந்திரபிரசாத் மற்றும் மணிகண்டனை தேடி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai