சுடச்சுட

  

  பூலாம்பாடி எரிவாயு நிறுவனத்தில் கணினி, செல்போன் திருட்டு

  By பெரம்பலூர்  |   Published on : 14th November 2014 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடியில் உள்ள எரிவாயு நிறுவனத்தில் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டது வியாழக்கிழமை காலையில் தெரியவந்தது.

  வேப்பந்தட்டை அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மனைவி சுதாலெட்சுமி (35). இவர், அங்கு எரிவாயு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், புதன்கிழமை இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். வியாழக்கிழமை காலையில் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த கணினி, இன்வெட்டர், செல்போன் உள்பட ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது. சுதாலெட்சுமி அளித்த புகாரின்பேரில், அரும்பாவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai