சுடச்சுட

    

    அரியலூர் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

    அரியலூர் அருகே உள்ள கொல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (58). விவசாயி. இவர் வியாழக்கிழமை பிற்பகல் செந்துறை புறவழிச்சாலை அருகேயுள்ள ஒரு தோப்பில் தனது ஆடுகளுக்கு தளை பறித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு தளை உயர்அழுத்த மின்சார கம்பியில் சிக்கியிருந்தது. அதனை எடுப்பதற்காக கோவிந்தசாமி, கிளையை பிடித்து இழுத்தபோது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் கருகி இறந்தார்.

    இதுகுறித்து அரியலூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai