சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் சின்னவளையத்தைச் சேர்ந்த சங்கர் மலர்கொடி தம்பதிக்கு 3 மகள்கள். இதில் மலர்கொடியின் கணவர் சங்கரும், மூத்த மகளும் இறந்து விட்டனர்.

  இந்நிலையில் கட்டட வேலை செய்து வந்த மலர்கொடி தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். மலர்கொடிக்கும் தனது உடன் வேலை பார்க்கும் நல்லணம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்(35) என்பவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜேந்திரன் மலர்கொடி வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வாராம். இந்நிலையில் மலர்கொடியின் 2 வது மகள் கர்ப்பமாக இருந்தது அண்மையில் தெரியவந்தது. இதையடுத்து தனது மகளிடம் மலர்கொடி விசாரித்ததில் கர்ப்பத்துக்கு ராஜேந்திரன் தான் காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து மலர்கொடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கவிதா வழக்கு பதிந்து ராஜேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேந்திரனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai