சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே பெட்டிக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 21 சமையல் எரிவாயு உருளைகளை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

  ஜயங்கொண்டம் அருகேயுள்ள வானதிரையன்பட்டினத்தில் பெட்டிக்கடை, மளிகைக்கடைகளில் வீட்டு உபயோகத்துக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்து உணவகங்கள், வணிக நிறுவனங்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக ஜயங்கொண்டம் வருவாய்க் கோட்டாட்சியர் கருணாகரன், வட்டாட்சியர் முருகன் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சிவக்குமார் என்பவரது பெட்டிக்கடையிலிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 21 எரிவாயு உருளைகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட எரிவாயு உருளைகள் ஜயங்கொண்டத்தில் உள்ள எரிவாயு உருளை விநியோக நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai