சுடச்சுட

  

  அடிப்படை வசதி கோரி மாணவ, மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு

  By அரியலூர்,  |   Published on : 15th November 2014 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செந்துறை அருகே அரசுப் பள்ளியில் அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி, மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ளது சன்னாசிநல்லூர் கிராமம். இந்தக் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

  இந்தக் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில் 120 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஒரு கட்டடம் மட்டுமே உள்ளது. இதில் உள்ள 3 அறைகளில் ஒரு அறையில் தலைமையாசிரியர் அறையாகவும், மற்றொரு அறையில் பள்ளிக்குத் தேவையான நாற்காலி, மேசை உள்ளிட்ட தளவாடப் பொருள்களும் உள்ளன.

  இதனால், மீதியுள்ள ஒரு அறையில் மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கோடை காலங்களில் மரத்தடியில் நடத்தப்படும் வகுப்புகள், மழைக்காலம் வந்தால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விடும். இதனால், மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது.

  எனவே, இந்தப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டப்பட வேண்டும் என்று கோரி மாணவ, மாணவிகள் கொட்டும் மழையில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த செந்துறை வட்டாட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai